திங்கள், நவம்பர் 16, 2009

அப்பாவி குழந்தைகளுக்கு தீவிர வாத பயிற்சி அளிக்கும்......நக்சல்

நமக்குள்ளேயே  அடித்துக் கொண்டு சாவது......இது நம் நாட்டின் சாபமோ என்னவோ தெரியல. இனக் கலவரம், மதக் கலவரம், தீவிரவாதம், மொழிப் பிரச்சனை  இது போன்று நாம் ஏற்படித்திய பல காயங்கள் நம் பாரத தாயின் மார்பில் பச்சை குத்தியது போல் நீங்காத அடையாளமாய் இருகின்றன. இது போதாது என்று  நக்சல் என்னும் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு மிக தீவிரமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.இந்த வருடத்தில்  அந்த  இயக்கம் தன்னுடைய 40- வது பிறந்த நாளை (பலருடைய ரத்தத்தில் செய்த) கேக் வெட்டி கொண்டாடுகிறது. இந்த இயக்கம் பள்ளி செல்லும் அப்பாவி பிள்ளைகளையும் விட்டு வைக்கவில்லை, இந்த தீவிர வாத இயக்கத்தை சார்ந்தவர்கள்  பள்ளிக்கூட பிள்ளைகளையும்,வீட்டு பெண்களையும் கட்டாயபடுத்தி, மூளை சலவை செய்து, தன்னுடைய இயக்கத்தில் அவர்களுக்கு துப்பாக்கி பயிற்சி கொடுத்து நம் நாட்டிற்கு எதிராக சண்டைக்கு தயார்படுத்தி, உள்நாட்டுப் போருக்கு வழி செய்கின்றனர். பள்ளி குழந்தைகளோ புத்தகத்தை சுமக்கும் வயதில் துப்பாக்கியை சுமகின்றார்கள்,கல்வி கற்கும் வயதில் துப்பாக்கி சுடுவதை கர்ப்பிகின்றார்கள். போர்களுக்கும்,போராட்டங்களுக்கும் ஒரு சில விதிமுறைகள் இருகின்றன, போரில் பெண்களுக்கும்,குழந்தைகளுக்கும்,முதியவர்களுக்கும்  எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படக் கூடாது ஆனால் இன்றோ யார் அதை எல்லாம் பின்பற்றுகிறார்கள்,அவர்களையே ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். இவை எல்லாம் உண்மையான கொள்கைக்காக நடத்தும் போராட்டங்களாக இருந்தால் கணடிப்பாக இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவார்கள் ஆனால் இவர்களோ கூலிக்கு மாரடிப்பவர்கள் தானே. அரசியல்வாதிகளுக்கும், பணக்கார முதலைகளுக்கும் கூலிபடையாக வேலை செய்கின்றார்கள்.இவர்களால் மூளை சலவை செயப்பட்டவர்கள் எல்லோரும் சுயமாக சிந்திக்க தெரியாதவர்கள் தான் என்று திடமாக சொல்லலாம். படிக்காத மக்கள் தான் அப்படி என்றால்,படித்த இளைனர்களும் அப்படிதான் இருகின்றார்கள். யாரை தான் குற்றம் சொல்வது. இதோ இந்த தீவிர வாத நக்சல் பாரி இயக்கத்தின் 40 -வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி வெளி வந்த வீடியோ படம்  உங்களுக்காக,














இங்க கிளிக் செய்யவும்
CLICK HERE



 வாங்க! வாங்க! வந்துட்டு சும்மாவா போறது? ஒரு பின்னூட்டம் போட்டு போறது.

உங்கள் அன்பு SRM

1 கருத்து:

  1. பெயரில்லா16 நவ., 2009, PM 5:56:00

    அப்பாவி குழந்தைகளுக்கு ஜாதி,மதம்,இனம் போன்றவைகளை போதித்து, அவர்களை உலகின் முன்னே தலைகுனிவை ஏற்படுத்துவதை விட, இது எவ்வளவோ மேல். கவலைப் படவேண்டாம்.

    பதிலளிநீக்கு