புதன், மே 30, 2012

இன்றைய ஷாகிங் நியூஸ்.......தன் சொந்த குழந்தைகளின் நாக்கை அறுத்து, சிகரட்டல் சூடு போட்ட தந்தை!

தன் இரண்டு வயது சொந்த குழந்தைகளின் நாக்கை அறுத்து, சிகரட்டல் சூடு போட்ட தந்தை!

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக 2 வயது குழந்தையின் நாக்கை அறுத்து, உடம்பெல்லாம் சிகரெட்டால் சூடு போட்டுள்ளார். இந்த கொடூரமான மிருகம். குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தைகளை விட்டுவிட்டு முதல் மனைவி பிரிந்து சென்றதால் மனைவி மீதுள்ள கோபத்தை குழந்தை மீது காட்டியுள்ளார். இந்த கொடூரனின் பெயர் பூமிநாதன், வயது 35 . சாராய வியாபாரியான இவரது மனைவி 28 வயதான சங்கீதா. இவர்களுக்கு பூமிகா(4), புவனேஸ்வரி (2), சந்தோஷ் (1) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா 7 மாதங்களுக்கு முன்பு சங்கீதா தாயாருடைய வீட்டிற்கு சென்றுவிட்டார். குழந்தைகள் பூமிநாதனிடம் வளர்ந்தன. இதற்கிடையில் பூமிநாதன், சத்யா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று குழந்தை புவனேஸ்வரியை பூமிநாதன் சிகரெட்டால் உடம்பு முழுவதும் சூடு வைத்து அடித்துள்ளார். இதில் குழந்தைக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் பிளேடைக்  கொண்டு குழந்தையின் நாக்கை அறுத்து கொடுமை செய்திருகின்றார்.

இதையறிந்த குழந்தையின் தாய் சங்கீதா குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு குழந்தை புவனேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சங்கீதா பொலிஸில் புகார் செய்துள்ளார்.

இதை அறிந்த பூமிநாதன் தலைமறைவானார். போலீசார் அவரை தீவிரமாக 
தேடிவருகின்றனர்.

நன்றி 

FOR MORE : CLICK HERE
FOR EARN  : CLICK HERE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக