காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, டிசம்பர் 06, 2009

கொஞ்சம் சொல்லுங்களேன்......இதுதான் காதலா.....




அன்பு நண்பர்களே,

சில நாட்களாக என்னால் பதிவுகள் இட முடியவில்லை ஏனென்றால்,



"நான் காதலில் விழுந்து விட்டேன்.....என்னையே நான் மறந்து விட்டேன். எதோ ஒரு தனி உலகத்தில் வாழ்வதாக உணர்கிறேன்"

என் காதுகள் மற்றவர் பேச்சைக் கேட்கும் திறன் இழந்துவிட்டது, எப்போதும் அவளுடைய வார்த்தைகள் தான் ஒலிக்கின்றன,

என் கண்களின் பேராசையால்(அவளை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமாம் என் மனத்திரையில்)....சாலையை கடக்கிறேன் ஒரு குருடனைப் போல், .

உலகமே அழகாகிவிட்டது.......என்னோடு அவளில்லாத நாட்களை தவிர ,

தனிமையை விரும்புகிறேன்........துடிக்கின்றது என் மனம் அவளின் வார்த்தையை கேட்க தினம்,

என்னோடு அவளிலாத நாட்கள் அது என்னை விரும்பும் போதும்... நான் அதை வேறுகிறேன்,

வேறொரு உலகம் செய்து அவளோடு அங்கு வாழ நினைகிறேன்,என் இயலாமையை கண்டு அழுகிறேன் (ஏனென்றால் நான் கடவுள் இல்லையே),

சிந்தனை செய்ய மறுக்கிறது என் மனம்.....ஏனென்றால் அவள் மட்டுமே என்னுள்...

சுனாம்யின் தாக்கத்தையே எதிர்கொண்ட நான்,என் காதலின் ஏக்கத்தை எதிர்கொள்ள முடியவில்லை,

சிறகடித்து சந்தோஷமாய் பரந்த என்னை......சிறகொடித்து அவளின் சிறகுகளில் பறக்கச் சொல்கிறாள்....அவ்வப்போது அந்தரத்தில் அதனை பிடுங்கியும் கொ(ல்)ள்கிறாள்,

தனிமையில் பேசுகிறேன், உணவும், உறக்கமும் பறிபோயிற்று....அவள் என்னை நேசிக்கும் பொழுது இந்த உலகமே என்னை நேசிப்பதாக உணர்கிறேன்...

என்னுள் இனம் புரியாத சிந்தனையையும் ......இதயத்தில் சுகமான வலிகளையும் சுமந்து வாழ்கிறேன் ..... அவளோடு வாழப்போகும் அந்த நாட்களுக்காக...



கொஞ்சம்  சொல்லுங்களேன்......இதுதான் காதலா.....