வியாழன், ஜூலை 15, 2010

உங்கள் ஆடம்பர திருமணத்தால் யாருக்கு லாபம்?

நன்றாக யோசித்து பார்த்தல் யாருக்கும் லாபமில்லை! அதுமட்டுமில்லை  ஊர்ல இருக்கற ஏழைகளுக்கு  தான் ரொம்ப கஷ்டம், இப்படி ஆடம்பர திருமணங்கள் அதன் தாக்கத்தை நம்முடைய உற்றார், உறவினர்களுக்கிடையே, நம்மை சுற்றி அக்கம்ப்பக்கம் உள்ளவர்களுக்கிடயே ஏற்படுத்தும். இவர்களுள் எத்தனையோ பேர் ஏழைகளாக  இருக்கின்றனர்.இவர்களும் தன்னுடைய பையனுக்கு இப்படி ஒரு ஆடம்பரமாக திருமணம் செய்ய நினைகின்றனர்...அதுவும் அவர்களின் செலவில் அல்ல, பெண் விட்டார் செலவில். அதனுடைய விளைவு பெண் வீட்டாருக்கு, கடனை வாங்கி ஆடம்பரமாக  திருமணம் செய்ய வேண்டியுள்ளது. இதில் கடன் பட்டு வாழ்நாள் முழுவதும் வாங்கிய கடனுக்கு வட்டியை கட்டி, அந்த கடனை முழுமையாக அடைக்க முடியாமல் அவன் பிள்ளைக்கு அதனை பரிசாக கொடுத்துவிட்டு, சிவனேன்னு போய்விடுகின்றார், அந்த மகன் அந்த கடனை அடைப்பதற்குள் அவனுக்கு திருமணமாகி, அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து விட்டால் அவ்வளவுதான் அவன் செத்தான். இப்படியே ஏழைகளாக பிறந்த இவர்கள், தன்னை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நினைத்தாலும் இந்த சமுதாயம் மறைமுகமாகவோ, நேரடியாகவோ தடையாக உள்ளது. ஆகையால் திருமணங்களில் ஆடம்பரங்களை தவிர்த்துகொள்ளுங்கள். உங்களிடம் பணம் அதிகம் இருக்கிறது செலவு செய்கின்றீர்கள், இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் சிறிது   யோசித்து பாருங்கள். இல்லாதவனை பற்றி நான் ஏன் கவலை பட வேண்டும் என்கிறீர்களா? அதானே "இருப்பவன் எப்பொழுது இல்லாதவனை பற்றி கவலை பட்டிருகான்" என்கிறீர்களா....இந்த சமுதாயத்தை புத்தி பலம்  படைத்தவன் வென்று விடுகின்றான்...பலவீனமானவன் தோற்று அழுகின்றான்!    வாழ்க வளமுடன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக