செவ்வாய், பிப்ரவரி 22, 2011

இயற்கை நமக்களித்த அரிய பொக்கிஷம் - இயற்கை மருத்துவம்

PINEAPPLE
என் இனிய தமிழ் நெஞ்சங்களே,

                   இயற்கை நமக்கு அளித்திருக்கும் உணவு பொருட்களில் பல மருத்துவ குணம் கொண்டதாக இருக்கின்றது. அதை ஒவ்வொன்றாக பாப்போம் ,

முதலில்,  அண்ணாச்சி பழத்தை பற்றி பார்ப்போம்,

*20gm  அன்னாசி  பழத்திலுள்ள சத்துக்கள்  வைட்டமின் ஏ-17mg , பி-2 -0 .34mg ,
சி-0 .18mg . சுண்ணாம்புச்சத்து -6mg , இரும்புச்சத்து ௦.3gm

* அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள்  சாபிட்டால்  ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள்,எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு , ஞாபக சக்தி  குறைவு  போன்றவை குணமடையும்.

*மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி சாற்றை சாப்பிட்டால்  சீக்கிரம் குணமடைவார்கள்.

*இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்கள் அன்னாசி பழ ஜூஸ் சிறந்த ஒரு டானிக்.

*பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம்  நீங்க நல்ல மருந்து அன்னாசி.

*பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாக அன்னாசி உதவும்.

*அன்னாசி இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது.

*தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும்.

அன்னாசி நீ உண்மையிலே அண்ணாச்சி தான்.

நன்றி நண்பர்களே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக