வெள்ளி, ஜனவரி 22, 2010

சிந்தித்து செயல்படு நண்பா....உன்னைப் பற்றி இந்த உலகம் சிந்திக்கும்.

அன்பு நெஞ்சங்களே,
இதோ உங்கள் சிந்தனைக்கு சில துளிகள்,


பேசும் முன் கேளுங்கள்,எழுதும் முன் யோசியுங்கள்,செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.

சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

நான் மாறும் பொழுது தானும் மாறியும்,நான் தலையசைக்கும் பொழுது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்கு தேவையில்லை.அதற்க்கு என் நிழலே போதுமானது.

நோயை விட அச்சமே அதிகம் கொள்ளும்.

நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை என குறிப்பிடுவதற்கே,சிறிய தவறுகளை ஒப்புக் கொள்கிறோம்.

முழுமையான மனிதர்கள் இருவர், ஒருவர் இன்னும் பிறக்கவில்லை,மற்றவர் இறந்துவிட்டார்.

ஓடுவதில் பயனில்லை.நேரத்தில் புறபடுங்கள்.

எல்லோரையும் நேசிப்பது கடினம் ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

நல்லவர்களோடு நட்பாயிரு, நீயும் நல்லவனாவாய்.

காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை.ஆனால் காரணம் நல்லதை இருப்பதில்லை.


இவர்கள் ஏன் இப்படி என்பதை விட,இவர்கள் இப்படிதான் என்று எண்ணிக் கொள்.

யார் சொல்வது சரி என்பதை விட,எது சரி என்பதே முக்கியம்.

பல முறை சிந்தியுங்கள் ஒரு முறை முடிவெடுங்கள்.

உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகை வலம் வந்துவிடும்.

உண்மை தனியாக செல்லும்,பொய்க்குதான் துணைத் தேவை.

அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிபடுத்துபவர் ஆர்வத்துடன் பணிபுரிவார்.

கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை, சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

சரியானது எது என தெரிந்த பிறகும் அதை செய்யாமல் இருபதற்கு பெயர்தான் கோழைத்தனம்.

ஒரு துளி பேனா மை பல லட்சம் பேரை சிந்திக்க வைக்கிறது.

தீவிரமாக ஒரு காரியம் செய்யும் பொது இந்த உலகம் அதை வீண் முயற்சி என்று சொல்லும், அது வெற்றி அடைந்தாள் விட முயற்சின்னு சொல்லும்.

உங்கள் வாயை திறக்கும் முன், உங்கள் மனதை திறவுங்கள்.

வெறுமையான நம் மனதை எதிரிகளால் படிக்க முடியாது.

இப்படிக்கு,

உங்கள் SRM

  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக