வியாழன், டிசம்பர் 24, 2009

வீரத் தாய் பெற்றெடுத்த ஒரு வேங்கையின் வேட்டை

என்ன தவறு செய்தான் என் வீரத் தமிழன்,அப்பாவிகளை அநியாயமாக கொன்று குவித்த மிருகங்களை தானே வேட்டையாடினான், தந்திரமாய் தமிழனின் உயிர்களை விலைபேசிய கயவர்களைத்தானே வேட்டையாடினான், எமது சகோதரிகளின் கற்பு பறிபோக காரணமாய் இருந்த மிருகங்களைதானே வேட்டையாடினான். இது தவறா? இது தவறு என்றால் இந்த உலகமே தவறுதான்...நல்ல மரங்கள் முதலில் வெட்டப்படுகின்றன என்பார்கள் அதற்கேற்ப தவிக்கும் தமிழர்களுக்கு நிழல்த் தந்த ஒரே ஆலமரமும் வெட்டப்பட்டுவிட்டது, ஆனால் அதன் வேர்கள் இன்னமும் உயிரோடுதான் இருகின்றன.எம்முடைய தலைவர் இந்த உலகை விட்டு மறைந்தாலும் எங்கள் உயிரில் கலந்திருகின்றார்.
 


எம் தலைவர் எம்மை விட்டு சென்றப் பின் எமக்கு எதனை...எதனை அவலங்கள்...எதை சொல்ல நான்? எம் தலைவனை இழந்து தலையற்ற முண்டங்களாக வாழும் அவலமதைச்  சொல்லவா? உரிமைகளை இழந்து, தன் உடைமைகளை இழந்து, தன் உறவுகளை இழந்து உயிரிருந்தும் நடைபிணமாக வாழும் அவலத்தை சொல்லவா? வீர ஆண்மகனேல்லாம்  கோழைகளாகிய அவலத்தை சொல்லவா? அரசியல் சூழ்ச்சிக்கும், அற்ப ஆசைகளுக்கும் அடங்கிப் போகும் நம் அரசியல் தலைவர்களின் அவலத்தை சொல்லவா? மக்கள் மறதியாளர்கள் என்பதை நம்மை ஆள்பவர்கள் நன்கு அறிந்திருகின்றனர், அதனால் தான் எம் தலைவரின் தியாகத்தையும், அவர் நமக்காக பட்ட துன்பத்தையும் இன்று மறந்துவிட்டோம் என்பதைவிட அரசியல் வாதிகளின் சூழ்ச்சியால் மறக்கடிக்கப்பட்டோம்  என்பதே சரி. ஒரு பிரச்சனையை மறக்கடிக்க,இன்னொரு பிரச்னை, அந்தப் பிரச்சனையை மறக்கடிக்க இன்னொன்று..இது போல் நம்மை குழப்பத்திலேயே வைத்திருந்தால் தான் அவர்கள் சுகபோகமாக வாழ முடியும்.இந்த நேரத்தில் ஹிட்லர் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகின்றது" உங்கள் ஆட்சி நிலைக்க வேண்டுமென்றால், மக்களை பயத்திலேயே வைத்திருங்கள்"  இன அழிப்பு போரில் ஹிட்லரையும் மிஞ்சிவிடுவான் போலிருக்கு இந்த ராவணன் ராஜபக்ச.

எங்கே மறைந்தான் என் வீரத்  தமிழன்?, எங்கே மறைந்தது அவனது வீரம்? ஏன் குறைந்துவிட்டது அவனின் ஆண்மை? எம் தலைவன் ஒரு கனவு கண்டான் "நாடோடிகளாக திரியும் எம் உறவுகளுக்கேன்று ஒரு தேசம் வேண்டுமென்று" அதை நிஜமாக்க தன் வாழ்கையே அற்பனித்தான் ஆனால் அந்த கனவு நினைவாவதற்க்கு முன்னே கலைந்து விட்டது. நம் எல்லோருக்காகவும் கனவு கண்ட எம் தலைவரின் கனவு எமதல்லவா? அதை நிஜமாக்க ஒவ்வொரு உண்மையான தமிழனும் உறுதி கொள்ளவோம் வாருங்கள்...ஒரு ஆலமரம் சாய்ந்தாலும் அது ஓராயிரம் வேர்களை விட்டுசென்றுள்ளது.....நாம் எல்லோரும் நாளைய ஆலமரமாய் மாறுவோம், நம் தலைவரின் கனவை நனவாக்குவோம்.

வாழ்க தமிழ் ......வளர்க தமிழனின் புகழ்

உங்கள் SRM    

   


   

3 கருத்துகள்:

  1. பெயரில்லா25 டிச., 2009, PM 5:16:00

    எம் தலைவர் உயிருடன் இருக்கின்றார். தமிழர்களுக்கு நிழல் தந்த,நிழல் தரும், ஒரே ஆலமரம் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறது.எம்முடைய தலைவர் எங்கள் உயிரில் கலந்திருகின்றார்.

    பதிலளிநீக்கு
  2. எம் தலைவர் உயிருடன் இருக்கின்றார். தமிழர்களுக்கு நிழல் தந்த,நிழல் தரும், ஒரே ஆலமரம் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறது.எம்முடைய தலைவர் எங்கள் உயிரில் கலந்திருகின்றார்.வீரத் தாய் பெற்றெடுத்த வேங்கை கயவர்களை தானே வேட்டையாட வருவான்.எம் உறவுகளுக்கேன்று ஒரு தேசம், அதை நிஜமாக்க வருகிறான்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி மணி,
    கண்டிப்பாக ஒரு நாள் நம் கனவு நனவாகும்

    பதிலளிநீக்கு